Tuesday, September 25, 2012

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மற்றொரு மைல்கல் இஸ்ரோவின் 100ஆவது திட்டம்

ஹரிகோட்டாவிலிருந்து போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் (பி.எஸ்.எல்.வி.) மூலம் தனது 100ஆவது செயற்கைக்கோளை கடந்த 9ஆம் தேதி வெற்றிகரமாக ஏவியது. இந்தியா தனக்கான சொந்த விண்வெளித் திட்டத்தை நிறுவுவதற்கான முதல் அடியை எடுத்துவைத்து அரை நூற்றாண்டு ஆகிறது. இந்தியாவின் முதல் பரிசோதனை முறையிலான செயற்கைக்கோளான ஆர்யபட்டா 1875ஆம் ஆண்டு சோவியத் யூனியனிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. அதற்கு ஐந்து ஆண்டுகள் கழித்து இந்தியாவிலிருந்தே, எஸ்.எல்.வி. - 3 ராக்கெட்டைப் பயன்படுத்தி, ஒரு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தபட்டது. அறுபதுகளில் இரு அடுக்குகள் கொண்ட ஃபிரான்ஸ் நாட்டின் ராக்கெட் ஒன்றை இந்தியாவில் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் ஏவுகளங்களைத் தயாரிக்கும் திட்டத்திற்குத் தேவையான திட ஏவு திறன்கள் இந்தியாவில் உருவாவதற்கு இதுவே தொடக்கமாக அமைந்தது. பத்தாண்டுகளுக்குப் பிறகு இஸ்ரோ பெற்ற இன்னொரு ஒப்பந்தம் விண்ணில் ஏவுவதற்கான ஃபிரான்ஸ் நாட்டின் திரவ ஏவு திறன் தொழில்நுட்பம் இந்தியாவுக்குக் கிடைக்க உதவியது. இதுவே பி.எஸ்.எல்.வி.யின் இரண்டாம் கட்டத்திற்கு வித்திட்டது. அடுத்தடுத்து 21 செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ள பி.எஸ்.எல்.வி. மிக வலுவான கருவியாக உருப்பெற்றுள்ளது. 50க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்கள் மற்றும் விண்கலங்களை அது விண்ணில் செலுத்தியிருக்கிறது. இவற்றில் பாதி வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்காகச் செய்யப்பட்டது. பி.எஸ்.எல்.வி. செயல்படத் தொடங்கியதிலிருந்து இந்தியாவின் தொலை உணர்வு செயற்கைக்கோள்கள் அனைத்தைம் சுமந்து சென்றது. இந்தியா சந்திர மண்டலத்துக்கு முதன் முதலாக அனுப்பிய அனுப்பப்பட்ட சந்திராயன் -1 என்னும் விண்கலத்தையும் அது விண்ணில் செலுத்தியது. செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா அனுப்பவிருக்கும் முதல் விண்கலத்தையும் இதுவே அனுப்பிவைக்கும். பி.எஸ்.எல்.வி. இருப்பதால் தொலை உணர்வு செயற்கைக்கோள்களைச் செலுத்த வெளிநாடுகளை நாடத் தேவையில்லை. தற்போது செலுத்திய பி.எஸ்.எல்.வி - சி2 விண்கலத்தில், இரண்டு வெளிநாட்டு செயற்கைகோளையும் சுமந்து சென்றது. இந்திய விண்வெளித் துறை ஏற்கனவே மூன்று தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. மூன்று டன்களுக்கு மேல் எடை கொண்ட இவை ஐரோப்பாவின் ஏரியன் - 5இன் மூலம் செலுத்தப்பட்டன. நான்காவது செயற்கைக்கோளான ஜி.எஸ்.ஏ.டி. - 10 ஏரியன் 5 மூலம் இன்னும் இரு வாரங்களில் செலுத்தப்படவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment