Thursday, August 9, 2012
மனிதா... நீ மகத்தானவன்! - புத்தக மதிப்புரை
புத்தக மதிப்புரை
புத்தகத்தின் பெயர் : மனிதா... நீ மகத்தானவன்!
விலை : ரூ. 120.00
நூலாசிரியர் : யா.சு.கண்ணன்
வெளியீடு : ஆர் மீடியா பதிப்பகம்,
37/55, சிவில் ஏவியேஷன் காலனி,
நங்கநல்லூர், சென்னை & 61.
மொபைல்: 9884886240.
இன்றைய உலகில் சுயமுன்னேற்ற நூல்கள் தமிழிலும் அதிகமாக வரத் தொடங்கியுள்ளன. ஆன்மீக இலக்கியங்களைக் கூட சுயமுன்னேற்ற அடிப்படையில் தந்தால் தான் இளைஞர்கள் விரும்பி படிக்கிறார்கள். ஆனால் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய நூல்கள் தமிழில் குறைவே. இந்த புத்தகத்தை எழுதியதன் மூலம் அந்த குறையைத் தீர்க்க யா.சு.கண்ணன் முயன்றிருக்கிறார்.
வேறு அடிப்படைகளில் அல்லாமல் யதார்த்த அடிப்படையில் புத்தகத்தை எழுதியிருப்பது வாசகர்களின் ஈடுபாட்டை நிச்சயம் அதிகரிக்கும். அயல்நாட்டு சிந்தனையில் போகாமல் நமது பாரம்பரியத்தின் வழியில் நின்று புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.
பணம் வாழ்க்கைக்கு அவசியம் என்றாலும் வெறும் பணம் மட்டும் மற்றவர்களின் மதிப்புக்கு போதுமானதல்ல. பணத்துடன் நல்ல குணாதசியங்கள் தேவை. அந்த குணங்கள் எவை என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார். மேலும், பல்வேறு தோல்விகளுக்கு காரணங்களையும் அவை தொடராமல் இருப்பதற்கு தேவையான பண்புகளையும் நாம் சிந்திப்பதில்லை. தோல்விகளை அறிந்துகொள்வதோடு அவற்றை போக்குவதற்கான காரணங்களையும் நாம் தெரிந்துகொள்வதே வெற்றிக்கு வழிவகுக்கும். இந்த சிந்தனையை இந்த புத்தகத்தில் யா.சு.கண்ணன் விடைத்திருக்கிறார்.
சாதாரண மனிதனும் இந்த புத்தகத்தை படித்தால் தன்னம்பிக்கை பெறுவது நிச்சயம்.
புத்தகத்திலிருந்து....
‘லட்சியத்தை தெளிவாகத் தீர்மானியங்கள்; இலக்குகளை நிர்ணயுங்கள்; அவற்றை அடைய திட்டங்களை வகுத்துக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கையுடன் முன் வந்து செயல்படுங்கள். பிறருடைய ஒத்துழைப்பையும் பெற்று முறைப்படுத்தப்பட்ட முயற்சியை மேற்கொள்ளுங்கள். ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள்ளாகவே நாம் ஒரு தெளிவான திசையில் போய் கொண்டிருப்பது புலனாகும்’’. & பக்கம்.51
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment