Wednesday, October 6, 2010

எனது பார்வையில் அயோத்தி தீர்ப்பு

ஒரு வழியாக அயோத்தி ராம ஜென்மபூமி - பாபர் மசூதி வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பாகி விட்டது. மேலோட்டமாக பார்ப்பவர்கள், "யாரும் வெற்றியோ, தோல்வியோ அடைந்து விட முடியாத வகையில் தீர்ப்பு வந்து விட்டது. ஹிந்துக்களுக்கோ, முஸ்லீம்களுக்கோ யாருக்கும் முழுமையான வெற்றி கிடைத்து விடவில்லை. ஆனாலும் ஹிந்துக்களின் தரப்பு தீர்ப்பை வரவேற்க வேண்டும்" என்று பேசுகிறார்கள்.

ஆனால் உண்மையில், இது ஹிந்துக்களுக்கு ஏற்பட்ட மிகபெரிய தோல்வி என்பதில் சந்தேகம் இல்லை. உலகில் எந்த ஒரு மதத்துக்குமே, இதுபோன்று தங்களுடைய புனித இடத்தை பிரித்துக் கொண்டு அனுபவிக்கும் துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டதில்லை. ஆனால் அயோத்தியில் முஸ்லீம்களுக்கு மூன்றில் ஒரு பங்கை விலை கொடுத்து தான் ராமர் கோயில் கட்டும் தீர்ப்பை பெற வேண்டியுள்ளது.

பாரதத்தின் பல கோயில்களின் அருகில் மசூதிகளையோ, சர்ச்சுகளையோ அனுமதித்ததால் ஹிந்துக்கள் தினந்தோறும் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றார்கள். சபரிமலை ஐய்யப்பன் கோயில் இதற்கு ஒரு முக்கிய உதாரணம். ஆனால் அந்த கசப்புணர்வுகளை ராம ஜென்மபூமி விவகாரத்தில் சுலபமாக மறந்து விடவே ஹிந்துக்களின் தரப்பு விரும்புகிறது.

ஹிந்துக்களின் இந்த பரந்த மனப்பான்மையை பலவீனம் என்றோ, கோழைத்தனம் என்றோ நினைத்து விட்டால் நஷ்டம் முஸ்லீம்களுக்கு தான். இந்த நாட்டின் பெரும்பான்மை சமுதாயத்தின் நம்பிக்கையை இஸ்லாமிய சமுதாயம் இழக்க நேரிடும்.

ஹிந்துக்களின் கோயிலை இடித்தோ அல்லது கோயில் இடிப்பாடுகளின் மீதோ தான் மசூதி கட்டப்பட்டுள்ளது என்று தொல்பொருள் துறையின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதை நீதிமன்றமும் ஏற்றுள்ளது. 1949 - முதல் இந்த இடத்தில் ராமர் சிலை வைத்து வழிபாடு நடந்துள்ளது. இந்த இடத்தில் முஸ்லீம்கள் தொழுகை நடத்தியதற்கான ஆதாரம் இல்லை. இந்த சூழ்நிலையில் முஸ்லீம்களுக்கு இடம் அளிக்கப்பட்டது அதிகம்.

நீதிமன்றம் தனது தீர்ப்பில் கோடிக்கணக்கான ஹிந்துக்களின் நம்பிக்கையான 'அயோத்தியில் ராம பிரான் பிறந்தார்' என்பதை ஏற்றுள்ளது. இதை போலி மதசார்ப்பின்மைவாதிகளும், சில பத்திரிக்கைகளும் குறை கூறுகின்றார்கள். அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்?. நீதிமன்றம் ஹிந்துக்களின் நம்பிக்கையை அலட்சியம் செய்ய வேண்டும் என்றா? அப்படி செய்தால் நீதிமன்றம் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும். நல்ல வேலையாக நீதிமன்றம் ஹிந்துக்களின் நம்பிக்கைக்கு மதிப்பு அளித்துள்ளது.

தீர்ப்பு வருவதற்கு முன்னால் நீதிமன்ற தீர்ப்பை ஏற்போம் என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி போன்றவர்கள் கூறினார்கள். ஆனால் தீர்ப்பு வந்தவுடன் "அகழ்வாராய்ச்சி ராஜராஜ சோழனுக்கு நடக்கவில்லையே?" என்று புலம்புகிறார் கருணாநிதி. தமிழகத்தை ஆண்டுக் கொண்டிருப்பது அவர் தானே? ராஜராஜ சோழனை பற்றிய அகழ்வாராச்சிக்கு உத்தரவிட்டிருக்கலாமே? யார் வேண்டாம் என்றார்கள்? ராஜராஜன் தமிழர்களின் நாயகன் என்றால் ராம பிரான் கோடிக்கணக்கான ஹிந்துக்களின் நாயகன் ஆவான். தமிழகத்தில் இருக்கும் ஹிந்துக்களுக்கும் ராமன் தான் நாயகன். ஒட்டுமொத்த தமிழர்களின் தலைவர் என்று தனக்குத்தானே பீற்றிக்கொள்ளும் கருணாநிதி அடுத்த ஜென்மத்திலாவது ராமனை உணர்வாராக.

ஆந்திர பிரதேசத்தின் மாநில காங்கிரஸ் செயலாளர் ஆனந்த் பாஸ்கர் என்பவர் பாபர் மசூதி கமிட்டி அமைப்பாளர் ஹஷீம் அன்சாரிக்கு 'பத்மபூஷண்' விருது தரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார். ஏனென்றால் ஹஷீம் அன்சாரி சமரச பேச்சுக்கு தயாராக இருக்கிறாராம். 60 வருடங்களாக இந்த ஞானோதயம் ஹஷீம் அன்சாரிக்கு வரவில்லை. இப்போது தோற்ற பிறகு வந்து விட்டதாம். காங்கிரஸ்காரர்கள் நமது தேசிய விருதுகளின் நற்பெயரை எந்த அளவுக்கு சீரழிக்க முடியுமோ அவ்வாறெல்லாம் சீரழிக்கிறார்கள். அவர்களை விட்டால் அப்சல் குருவுக்கும், கசாப்புக்கும் "பாரத ரத்னா" விருது தந்து விடுவார்கள்.

நீதிமன்ற தீர்ப்பு பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்தவில்லை என்று காங்கிரஸ் கட்சி பிதற்றுகிறது. ராமர் கோயில் பற்றிய சிவில் வழக்குக்கும், பாபர் மசூதி பற்றிய கிரிமினல் வழக்குக்கும் வித்தியாசம் தெரியாத மூடர்கள் நம் நாட்டை ஆளுவதை என்னவென்று சொல்வது?

தீர்ப்பு வரும் முன்பு இஸ்லாமிய அமைப்புகள் தாங்கள் அமைதி காப்பதாக செய்திகளை பரப்பின. ஆனால் தீர்ப்பு வெளிவந்த சிறிது நேரத்திலேயே தங்களது சுயரூபத்தைக் காட்ட துவங்கிவிட்டன. தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களான தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், தவ்ஹீத் ஜமாத் ஆகியவை 'நேரடி நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக மிரட்டுகின்றன. இது தேசத்தின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்காதா? ஒருவேளை தீர்ப்பு முஸ்லீம்களுக்கு முழுமையாக சாதகமாக வந்திருந்தால் ஹிந்து இயக்கங்களுக்கு பத்திரிக்கைகள் உபதேசம் தந்திருக்கும். இப்போது மட்டும் அவை வாய் மூடி மௌனியாக இருப்பது ஏன்? ஏன் இந்த பாராபட்சம்?

நீதிமன்றத்தை குறை கூறி எந்த பயனும் இல்லை. கடைசி நேரத்தில் தீர்ப்பு தர வேண்டிய கட்டாயம். எப்படியும் அப்பீல் செய்வார்கள் என்ற கண்ணோட்டத்தில் 3 மாதம் அவகாசமும் தந்துள்ளது.

இந்த நேரம் முஸ்லீம்கள் தாங்களும் பாரத தேசத்தின் நல்லிணக்கத்தை விரும்புபவர்கள் தான் என்பதை உணர வேண்டிய நேரம். ராமன் இந்த நாட்டின் உதாரண புருஷன். ராமன் பிறந்த இடத்தில் இல்லாமல் வேறெங்கு அவனுக்கு ஆலயம் அமைத்தாலும் ஒரு படி கீழே தான். இதை முஸ்லீம்கள் உணர்ந்து ராமர் ஆலயம் அமைய முழு ஆதரவு தர வேண்டும். ராமனுக்கு பலம் சேர்த்தால் தான் தேசம் பலம் பெற முடியும். ராம ஜென்மபூமி இல்லாமல் வேறெங்கு வேண்டுமானாலும் முஸ்லீம்கள் மசூதி கட்டி தொழுகை நடத்தலாம். பரந்த மனப்பாமை குணம் கொண்ட ஹிந்துக்கள் நிச்சயம் தடை சொல்ல மாட்டார்கள்.

மேலும், இந்த தேசத்தை அசல் வித்தாக கொண்டவர்கள் பாபரை ஆப்கானிஸ்தான் நாட்டின் கொள்ளைக்காரன் என்று தான் நினைக்கிறார்கள். முஸ்லீம்கள் தாங்கள் இந்த நாட்டை சேர்ந்தவர்களா அல்லது அயல்நாட்டவர்களா என்ற கேள்விக்கு அவர்கள் தரும் பதில் பாபர் என்ற பெயரையே புறக்கணிப்பதில் தான் உள்ளது. இஸ்லாமிய சட்டத்தின் படி அல்லாவின் பெயரில் தான் மசூதி கட்ட முடியுமே தவிர எந்த தனிமனிதன் பெயரிலாவது மசூதி அமைவதை அவர்கள் ஏற்பார்களா? இஸ்லாமிய அறிஞர்கள் விளக்கம் அளிப்பார்களா?

g