Thursday, August 9, 2012
சீக்கியர் படுகொலையும் இந்தியர் எதிர்பார்ப்பும்
அமெரிக்காவில் உள்ள விஸ்காஸினில் இருக்கும் ஓக் க்ரீக் குருத்வாராவில் கடந்த 5ம் தேதி வேட் மைக்கேல் பேஜ் என்ற முன்னாள் ராணுவ வீரன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 சீக்கியர்கள் பலியானார்கள். 25க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் காயமடைந்தார்கள். உடனே பேஜை நோக்கி அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய தாக்குதலில் பேஜ் சுட்டு கொல்லப்பட்டான்.
இந்த சம்பவத்திற்கு இந்தியாவிலும், அமெரிக்க வாழ் இந்தியர்களிடமும் பெரும் கண்டனம் எழுந்துள்ளது. இந்த துப்பாக்கி தாக்குதலை கண்டித்து புதுடில்லியில் பல்லாயிரக்கணக்கான சிக்கியர்கள் அமைதி ஊர்வலம் நடத்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.
அமெரிக்காவில் கடந்த சில வருடங்களாகவே சீக்கியர்கள், இந்துக்கள், முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த தாக்குதலில் ஈடுபட்ட மைக்கேல் பேஜும் வெள்ளை இனவெறியாளனே என்று ஒரு மனித உரிமை அமைப்பு கூறுகிறது. இந்தியர்களை குறிவைத்து நடக்கும் இந்த தாக்குதல்களை இந்திய அரசு முக்கிய பிரச்சினையாக எடுத்துக் கொண்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து இந்தியாவின் கவலையை அமெரிக்க தூதர் நிருபமா ராவ் மூலமாக அமெரிக்க அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவங்கள் குறித்து பல்வேறு சீக்கிய அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
குறிப்பாக 9/11 சம்பவத்திற்குப் பிறகு அங்குள்ள சீக்கியர்கள் மீதும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் இது போன்ற சம்பவங்களுக்கு வெறும் இனவெறி மட்டுமே காரணமல்ல. மக்களுக்கு சுலபமாக துப்பாக்கி கிடைக்க வகை செய்யும் அமெரிக்க சட்டங்களும் காரணம் என்பதை கவனிக்க வேண்டும். அதிலும் குருத்வாரா தாக்குதல் நடந்த விஸ்கான்ஸின் மாநிலத்தில் துப்பாக்கி வழங்கும் சட்டம் எளிதாக உள்ளது. துப்பாக்கியை மக்கள் எளிதாக கையில் எடுப்பதால் அமெரிக்காவில் உள்நாட்டுக் குழப்பங்கள் அதிகரித்துள்ளன. போரில் பலியாகும் அமெரிக்க வீரர்களை விட துப்பாக்கி சூடுகளில் சிக்கி பலியாகும் அப்பாவி மக்களுடைய எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஓக் கிரீக் குருத்வாரா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க அரசு அமெரிக்க தேசியக் கொடிகளை அரை கம்பத்தில் ஏற்றி மூன்று நாள் துக்கம் அனுசரிப்பதாக ஒபாமா அறிவித்தது இந்திய - அமெரிக்க உறவுக்கு நல்ல அறிகுறி. ஆனால் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு அங்குள்ள உள்நாட்டு துப்பாக்கி சட்டமே காரணம் என்பதை கவனத்தில் கொள்ளாதவர்களாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் அவரது எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள்.
இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் இருக்க வேண்டும் என்பதே அமெரிக்கவாழ் இந்தியர்களின் எதிர்ப்பார்ப்பு. அமெரிக்க அரசு அந்த நோக்கத்தை எப்போது பூர்த்தி செய்யும்?.
மனிதா... நீ மகத்தானவன்! - புத்தக மதிப்புரை
புத்தக மதிப்புரை
புத்தகத்தின் பெயர் : மனிதா... நீ மகத்தானவன்!
விலை : ரூ. 120.00
நூலாசிரியர் : யா.சு.கண்ணன்
வெளியீடு : ஆர் மீடியா பதிப்பகம்,
37/55, சிவில் ஏவியேஷன் காலனி,
நங்கநல்லூர், சென்னை & 61.
மொபைல்: 9884886240.
இன்றைய உலகில் சுயமுன்னேற்ற நூல்கள் தமிழிலும் அதிகமாக வரத் தொடங்கியுள்ளன. ஆன்மீக இலக்கியங்களைக் கூட சுயமுன்னேற்ற அடிப்படையில் தந்தால் தான் இளைஞர்கள் விரும்பி படிக்கிறார்கள். ஆனால் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய நூல்கள் தமிழில் குறைவே. இந்த புத்தகத்தை எழுதியதன் மூலம் அந்த குறையைத் தீர்க்க யா.சு.கண்ணன் முயன்றிருக்கிறார்.
வேறு அடிப்படைகளில் அல்லாமல் யதார்த்த அடிப்படையில் புத்தகத்தை எழுதியிருப்பது வாசகர்களின் ஈடுபாட்டை நிச்சயம் அதிகரிக்கும். அயல்நாட்டு சிந்தனையில் போகாமல் நமது பாரம்பரியத்தின் வழியில் நின்று புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.
பணம் வாழ்க்கைக்கு அவசியம் என்றாலும் வெறும் பணம் மட்டும் மற்றவர்களின் மதிப்புக்கு போதுமானதல்ல. பணத்துடன் நல்ல குணாதசியங்கள் தேவை. அந்த குணங்கள் எவை என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார். மேலும், பல்வேறு தோல்விகளுக்கு காரணங்களையும் அவை தொடராமல் இருப்பதற்கு தேவையான பண்புகளையும் நாம் சிந்திப்பதில்லை. தோல்விகளை அறிந்துகொள்வதோடு அவற்றை போக்குவதற்கான காரணங்களையும் நாம் தெரிந்துகொள்வதே வெற்றிக்கு வழிவகுக்கும். இந்த சிந்தனையை இந்த புத்தகத்தில் யா.சு.கண்ணன் விடைத்திருக்கிறார்.
சாதாரண மனிதனும் இந்த புத்தகத்தை படித்தால் தன்னம்பிக்கை பெறுவது நிச்சயம்.
புத்தகத்திலிருந்து....
‘லட்சியத்தை தெளிவாகத் தீர்மானியங்கள்; இலக்குகளை நிர்ணயுங்கள்; அவற்றை அடைய திட்டங்களை வகுத்துக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கையுடன் முன் வந்து செயல்படுங்கள். பிறருடைய ஒத்துழைப்பையும் பெற்று முறைப்படுத்தப்பட்ட முயற்சியை மேற்கொள்ளுங்கள். ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள்ளாகவே நாம் ஒரு தெளிவான திசையில் போய் கொண்டிருப்பது புலனாகும்’’. & பக்கம்.51
எண்ணமும் கோபமும் - நீதிக்கதை
ஒரு ஊரை அரசன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். அவன் தினசரி தேரிலேறி நகர்வலம் வருவான். அவன் நகர்வலம் வரும்போது மக்கள் அனைவரும் அவனுக்கு வணக்கம் செல்லுவார்கள். அவனும் மகிழ்ச்சியுடன் திரும்ப அவர்களுக்கு வணக்கம் தெரிவிப்பான். அந்த மக்களில் ஒரு விறகு கடைக்காரனும் இருந்தான். அவன் கடையை அரசன் கடந்துப் போகும் போதெல்லாம் அவன் வணக்கம் சொல்லுவான். அரசனும் மனதில் மிகுந்த வெறுப்பாக பதில் வணக்கம் தெரிவிப்பான். அந்த விறகு கடைக்காரனை பார்க்கும் போதெல்லாம் கோபம் வரும். ஆனால் அரசனுக்கு அதன் காரணம் தெரியவில்லை.
தன்னுடைய அமைச்சரைக் கூப்பிட்டு, ‘‘அவனைப் பார்த்தால் மட்டும் எனக்கு வெறுப்பு வருகிறதே? என்ன காரணம்?’’ என்றுக் கேட்டான். அமைச்சரோ இரண்டு நாள் கழித்து தான் பதில் சொல்ல முடியும் என்றுக் கூறிவிட்டார். இரண்டு நாள் கழித்து அரசன் வழக்கம் போல அந்த விறகு கடைக்காரனை கடந்து சென்றான். அவனுக்கு பதில் வணக்கம் சொல்லும் போது மகிழ்ச்சி பொங்கியது. அரண்மனைக்குத் திரும்பியவுடன் அமைச்சரை கூப்பிட்டு இந்த மனமாற்றத்திற்கு காரணம் கேட்டான்.
அமைச்சர் இப்போது பதில் கூறினார்: ‘‘அரசே! அந்த விறகு கடைகாரன் தன்னுடைய கடையில் நிறைய சந்தனக் கட்டைகளை இறக்கியிருந்தான். ஆனால் ஒன்று கூட வியாபாரம் ஆகவில்லை. அதனால் இந்த சந்தனக் கட்டைகள் வியாபாரம் ஆக வேண்டுமென்றால் அரசன் சாக வேண்டும்; அப்போது மட்டும்தான் சந்தனக் கட்டைகள் விற்பனையாகும் என்று நினைத்துக் கொண்டான். அதே வெறுப்புடன் உங்களுக்கு மேலோட்டமான சிரிப்புடன் வணக்கம் கூறுவான். அதனால் உங்களுக்கு அவன் மேல் கோபம் வந்தது’’ என்றார்.
அரசனுக்கு ஒரே ஆச்சரியம். ‘‘அது சரி. இப்போது அவனை பார்த்தபோது மகிழ்ச்சி வந்ததே? அதற்கு என்ன காரணம்?’’ என்றுக் கேட்டான். ‘‘நான் செய்த வேலைதான் காரணம் அரசே. நமது அரண்மனை வேலையாட்களுடன் அவனுடைய கடைக்கு போனேன். நம்முடைய அரண்மனையில் ராஜா பெரிய யாகம் ஒன்றை நடத்தவிருக்கிறார். அதற்கு நிறைய சந்தனக் கட்டைகள் தேவை என்று சொல்லி அவனிடமிருந்த சந்தனக் கட்டைகள் அனைத்தையும் வாங்கி விட்டேன். மேலும் தேவைப்பட்டால் உனக்குத் தெரிவிக்கிறேன் என்றுக் கூறிவிட்டேன். இன்று அவன் உங்களைப் பார்க்கும் போது அரசன் நீண்ட நாள் வாழ வேண்டும். அப்போது தான் நிறைய யாகங்களை நடத்துவார். தனக்கும் வியாபாரம் நடக்கும் என்று நினைத்துக் கொண்டே உங்களுக்கு வணக்கம் கூறினான். அவன் மனதில் தங்களைப் பற்றிய நல்ல எண்ணம் ஓடியதால் உங்களுக்கும் அவன் வணக்கம் சொல்லும்போது மகிழ்ச்சி ஏற்பட்டது’’ என்று பெரிய விளக்கம் தந்தார் அமைச்சர். அரசன் அமைச்சரின் மதியூகத்தைக் கண்டு வியந்து அவருக்கு பரிசும் தந்தான் என்பதை சொல்லவும் வேண்டுமா?
மாணவர்களான நமக்கும் இது பொருந்தும். நல்ல எண்ணங்களுடன் நண்பர்களைத் தேடினால் நமக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். கெட்ட எண்ணத்துடன் பழகினால் கெட்ட நண்பர்களும், எதிரிகளும் தான் நமக்கு கிடைப்பார்கள்.
Saturday, July 21, 2012
புத்தக மதிப்புரை - தர்மத்தின் குரல்
நூல் பெயர்: தர்மத்தின் குரல்
ஆசிரியர்: பூஜ்யஸ்ரீ பரமானந்த பாரதி சுவாமிகள் (ஆங்கிலம்)
தமிழாக்கம்: கடலூர் என்.ஆர்.சத்தியமூர்த்தி
வெளியீடு: ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம மண்டலி,
138, புது நகர், திருப்பூர் & 641601.
செல்: 94434 95950, 99522 66676
விலை: ரூ. 100/--&
கடவுள் இருக்கிறானா?, வேத சாஸ்திரங்கள் சொல்வதெல்லாம் உண்மை தானா?, மறுபிறவி என்பது உண்டா? என்ற கேள்வி நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவானவை. ஹிந்துக்களுக்கும், மற்ற மதத்தினருக்கும், ஏன் இங்கிருக்கும் நாத்திகர்களுக்கும் கூட இந்த கேள்விகள் எழாமல் இருப்பதில்லை.
இன்று உலகளவில் நம் ஹிந்து தர்மத்தின் மீது நம்பிக்கைகள் பெருகி வருகின்றன. நம் தர்மம் பற்றிய நூல்களை வெளிநாட்டவர்கள் கூட விரும்பி படித்து வருகின்றார்கள். இந்த நேரத்தில் ஹிந்து தர்மம் பற்றிய அடிப்படை அம்சங்கள் அடங்கிய நூல்களும் அதிக அளவில் வெளிவருகின்றன. ஆனால் அவை வாசகர்களின் நியாயமான கேள்விகளுக்கும் கூட பதில் தருவதில்லை. இந்த புத்தகம் எளிமையான முறையில் அமைந்திருப்பதோடு நாத்திகர்களின் தர்க்க ரீதியான கேள்விகளுக்கு ஆத்திகப்பூர்வமான பதில்கள் அதே போன்ற தர்க்க வாதங்களில் அமைந்திருப்பது சிறப்பம்சம்.
இந்நூலின் ஆசிரியர், பூர்வாசிரமத்தில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கல்வி நிலையத்தில் ஆய்வாளராக இருந்ததாக இந்த நூலின் அணிந்துரையில் தெரிய வருகிறது. ஆசிரியர் தனது வேதாந்த அறிவை அறிவியல் தன்மையோடு கலந்து ஜீவன், உயிர்த்தன்மை, மறுபிறவி, வேதங்கள் போன்ற அம்சங்களை விளக்குவது இந்த புத்தகத்தின் மதிப்பைக் கூட்டுகிறது. எளிமையான முறையில் கடினமான விஷயங்களை புரிய வைப்பதில் சுவாமிகள் எடுத்துக் கொண்ட முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளார்.
ஆங்கிலத்தில், ‘Foundation of Dharma’ என்ற பெயரில் வெளிவந்த புத்தகத்தை தமிழாக்கம் செய்தவர் கடலூர் என்.ஆர். சத்தியமூர்த்தி அவர்கள். அவருக்கும் நமது பாராட்டுக்கள். சிறப்பான முறையில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். ஓங்காரானந்தா சுவாமிகளின் அருள்வாழ்த்துரையும் இந்த புத்தகத்திற்கு வலிமை சேர்க்கிறது. இந்த புத்தகத்தை படித்த பின்பு, ஹிந்து மதம் பற்றி சாதாரண மனிதர்கூட சரியான முறையில் புரிந்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இயல்பாகவே எழுகிறது.
புத்தகத்தின் உள்ளே...
‘‘வேதங்கள் கற்பதில் உள்ள இந்த சிரமம், வேதங்களின் சிக்கலான மொழி நடையினாலா?
விஞ்ஞானத்தின் மொழி நடையும் சிக்கலானது தான். ஒருவன், பட்டப்படிப்பு வரை 15 ஆண்டுகள், விஞ்ஞானம் கற்றாலும், அவன் கற்றது மிகச் சொற்பமே. ஆழ்ந்த அறிவுக்கு, அவன் இன்னும் பத்தாண்டுகள் படித்தாக வேண்டும். அவ்வாறே, ஒருவன் வேடங்களின் ஆழ்ந்த அறிவைப் பெற வேண்டுமானால், அவன் தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தாக வேண்டும். இவ்வாறு செய்ய முடியாதவர்கள், வேதத்தின் அடிப்படை அறிவையாவது பெற வேண்டும். விஞ்ஞானத்தின் அடிப்படை அறிவையாவது பெறுவதற்காக, உயர்நிலைப்பள்ளி வரை படிப்பதை போன்றது இது. ஆனால் இத்தகையவர்கள் வேதங்களை விமர்சிக்கும் தகுதி தங்களுக்கு இருப்பதாக நினைத்துக்கொள்ளும் மாயையில் இருக்ககூடாது. இது, உயர்நிலைப்பள்ளி மாணவன் ஒருவன், நியூட்டனையோ ஐன்ஸ்டினையோ விமர்சிப்பதை ஒக்கும்’’ (பக்கம் 112).
Friday, April 6, 2012
"பாரதம் முன்னேறாததற்கு ஆட்சியாளர்களின் தாழ்வு மனப்பான்மையே காரணம்" சுதேசி பாத யாத்திரை நிறைவில் கோவிந்தாச்சார்யா பேச்சு
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது, நமது தேசிய முறையில் விவசாயத்தைப் பாதுக்காக்க வேண்டும், கறுப்புப் பணத்தை மீட்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சுதேசி விழிப்புணர்வு யாத்திரை கடந்த மார்ச் 5 - ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 -ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகத்தின் தொழில் தலைநகரமான கோயம்புத்தூரில் இருந்து துவங்கி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய நகரங்களைக் கடந்து ஏப்ரல் 2 - ஆம் தேதி மாநிலத் தலைநகரமான சென்னைக்கு வந்தடைந்தது. சென்னையில் பல இடங்களில் நடந்த தெருமுனைக் கூட்டங்களுக்கு பிறகு ஏப்ரல் 5 - ஆம் தேதி கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் நிறைவு விழா நடந்தது.
யாத்திரையின் ஒருங்கிணைப்பாளர் இளங்குமார் சம்பத் வரவேற்றார். சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் மாநகர அமைப்பாளர் வானமாமலை தொகுத்து வழங்கினார். பாத யாத்திரைக்கு தலைமைத் தாங்கிய சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநில அமைப்புச் செயலாளர் இராம.நம்பி நாராயணன் யாத்திரை பற்றி விளக்கினார். அவருடன் யாத்திரையில் பங்குகொண்ட 5 பேரை அறிமுகம் செய்து வைத்தார். மேலும் அவர் பேசுகையில், "சென்னையில் ஒரு நிகழ்ச்சி முடிந்து சுதேசி செயல் வீரர்கள் பேசிக் கொண்டிரும் போது இந்த யாத்திரை பற்றி யோசனை வந்தது. பிறகு எங்களது மாநிலக் குழுவில் இதுகுறித்து பேசி முடிவெடுத்தோம். யாத்திரை குறித்து குருமூர்த்திஜி யோசனை கூறும் போது யாத்திரை என்பது மக்களுக்கு நாம் எதாவது சொல்வது அல்ல, மாறாக அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்வதே முக்கியம் என்றார். அந்த யோசனையை நாங்கள் கடைப்பிடித்தோம். 11 ஊர்களில் மக்களோடு ஒன்றாக உட்கார்ந்து அவர்களோடு உரையாடினோம். பெரும்பாலான வணிகர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். அவர்களோடு விவசாயிகள், வழக்கறிஞர்கள் என்று பவேறு பிரிவினர்களும் பங்கேற்றார்கள். இந்தியாவில் தறி நெய்பவர்கள் அதிகமாக உள்ள சோமனூரில் ஆண்களை தறியில் உட்கார வைத்தார்கள்; பெண்கள் படித்தால் குடும்பத்துக்கு நல்லது என்று அவர்களை பட்டபடிப்பு படிக்க வைத்தார்கள். அதனால் ஆண்களுக்கு பெண் கிடைப்பது தட்டுப்பாடாக உள்ளது. இது போன்ற பல தகவல்களை யாத்திரையில் சேகரித்தோம். யாத்திரைக்கு மக்கள் தந்த வரவேற்பு எங்களுக்கு உற்சாகம் ஏற்படுத்துகிறது" என்று பேசினார்.
வாழ்த்துரை வழங்கிய தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் செயலாளர் கே.மோகன். "இப்போது சில்லறை வணிகம் குறித்து வந்துள்ள சட்டம் இது ஜனநாய நாடா? என்ற கேள்வியை எழுப்புகிறது. பழ வியாபாரம் செய்யும் சாதாரண பெண்மணி கூட லைன்சென்ஸ் வாங்க வேண்டும் என்பது அபாயக்கரமானது. வணிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் இந்த யாத்திரை இணைத்துள்ளது. இது ஒரு முன்னோடி யாத்திரை" என்று புகழாரம் சூட்டினார்.
சிறப்புரையாற்றிய தேசிய சுயமரியாதை இயக்கத்தின் தலைவர் கே.என்.கோவிந்தாச்சார்யா, தனது உரையில்,
"பல்வேறு நாடுகளில் பணியாற்றி விட்டு நமது தேச விடுதலைக்காக போராடுவதற்காக மகாத்மா காந்தி பாரதம் வந்த போது, அவரது குரு கோபால கிருஷ்ண கோகலே நாடு முழுவதும் யாத்திரை வர சொன்னார். அதன் மூலம் இந்த நாட்டு மக்களிடம் இருந்து கற்று கொள்ள முடியும் என்றார். அதனால் தான் காந்தி மிகபெரிய தலைவர் ஆனார்.
இந்த நாட்டில் உள்ள ஆறு லட்சம் கிராமங்களில் 90 கோடி மக்கள் வசிக்கிறார்கள். 9000 நகரங்களில் வெறும் 30 கோடி மக்கள் தான் வசிக்கிறார்கள். 45 கோடி மக்கள் கிராமங்களை மையமாக வைத்து வாழ்கிறார்கள். இங்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால் பிரேசில் நாட்டை சார்ந்தவர் ஒருவரை சந்தித்தேன். அவர் உத்தர பிரதேசமும், பிரேசிலும் ஒன்றாக இருப்பதாக கூறினார். அதற்கு நான் சொன்னேன், மக்கள் தொகை, சாலைகள், நிலப்பரப்பு போன்ற சில ஒன்றாக இருக்கலாம்; அனால் மக்களில் சிந்தனைகள் வேறாக தான் இருக்கும். இங்கு நதியை 'கங்கா மாதா' என்று தொழுகிறார்கள்; ஆனால் அவர்களுக்கு அது வெறும் தண்ணீர் தான். அங்கு கிளப்புகள் இருக்கின்றன. ஆனால் அங்கிருப்பவர்களும் நம் நாட்டில் இருக்கும் நிர்வாண சந்நியாசிகளும் ஒன்றா? இந்த நாட்டை கூகிள் தேடுதளம் மூலமாக பார்த்து அறிய முடியாது. யாத்திரை மூலமாகவே அறிய முடியும். மற்றயவர்களை பார்த்து நாம் காப்பி அடிக்க முடியாது.
உலகத்தில் 206 நாடுகள் உள்ளன. ஆனால் ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகை நம்மிடம் தான் உள்ளது. சீனாவில் மட்டும் தான் அவ்வளவு ஜனத்தொகை உள்ளது. அமெரிக்கா உட்பட 7 நாடுகளில் 10 கோடிக்கு மேல் 30 கோடி வரை ஜனத்தொகை; 46 நாடுகளில் 1 கோடிக்கு மேல் 10 கோடி வரை ஜனத்தொகை. மற்ற நாடுகள் எல்லாம் அதற்கு கீழே தான். நம் நாட்டில் குருடர்கள் மட்டும் 90 லட்சம பேர். இந்த நிலையில் நாம் மற்றவர்களை பார்த்து காப்பி அடித்தால் யானைக்கும் சுண்டெலிக்கும் முடிச்சு போடுவதே. நாம் நம் வழியில் போவது தான் சரிப்பட்டு வரும். இங்கிலாந்துக்கும் நமக்கும் இருக்கும் வாழ்க்கை முறைகள் வேறு. அதை எப்படி காப்பி செய்ய முடியும்.
உலகத்தில் இரண்டு சதவீத நிலப்பரப்பு கூட நம்மிடம் இல்லை. ஆனால் 60 சதவீத பறவைகள் நம் நாட்டில் தான் உள்ளன. இங்கிலாந்தில் குளிர் அதிகம். அதனால் காலுக்கு சாக்ஸ் போடுகிறார்கள். நமக்கு சூரியனின் அருள் அதிகம். அதனால் வெப்பம் அதிகம். அவர்களுக்கு சாப்பிட மாட்டுக்கறி தேவை. நமக்கு மாடு கோமாதா. அதனால் நமது முறையே நமக்கு சரியாக வரும்.
200 வருடங்களுக்கு முன்பு வரை பாரதம் தான் உலகத்தின் பணக்கார நாடாக இருந்தது. எனவே நமக்கு உலக நாடுகளுக்கு வழிகாட்டும் நம்பிக்கை வேண்டும். ஆனால் நமது ஆட்சியாளர்களாக இதுவரை இருந்தவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை தான் உள்ளது. இது தான் நமது பிரச்சனைகளுக்கு காரணம். எனவே முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் நம்பிக்கையுடன் நம் நாட்டை முன்னேற்றி உலகத்துக்கு வழிகாட்டும் நாடாக மாற்றுவோம்". இவ்வாறு கோவிந்தாச்சார்யா பேசினார்.
அடுத்து உரையாற்றிய சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் அகில பாரத இணை அமைப்பாளரும், பிரபல பத்திரிகையாளருமான எஸ்.குருமூர்த்தி பேசுகையில்,
"சமுதாயத்தின் மூலம் பெறுகின்ற படிப்பினையை எந்த நூலகத்திலும், பத்திரிக்கைகளையும் படித்து தெரிந்து கொள்ள முடியாது. ஆதி சங்கரர் நாடு முழுவதும் யாத்திரை போனது அத்வைதத்தை பரப்புவதற்காக அல்ல.நாடு மக்க்களிடம் இருந்து தெரிந்துக் கொள்வதற்காக தான். உப்பு சத்தியாகிரகம் தொடங்கிய பொது காந்திஜிக்கு புத்தி பேதலித்து விட்டதாக சில தலைவர்கள் கூட சொன்னார்கள். அகமதாபாத்தில் இருந்து 15 மைல் கடந்து ஒரு கிராமத்துக்கு இரவு 10.30 மணிக்கு பிறகு தான் யாத்திரை வந்தது. அந்த நேரத்தில் உடன் வந்த 150 பேருக்கும் உணவு தயாரிக்க சொன்னார் காந்திஜி. மக்களும் தயாரித்து தந்தார்கள். யாத்திரை தொடங்கும் போது 15 பேர் தான் அவருடன் வந்தார்கள். முடியும் போது வந்தவர்கள் ஒன்றரை லட்சம் பேர். அத்தனை பேருக்கும் உணவு தயாரித்தது சாதாரண மக்கள் தான். மக்களின் உணர்வை தெரிந்துக் கொண்டதாலேயே காந்தி மாபெரும் தலைவர் ஆனார்.
எனக்கு சிறிய அளவில் யாத்திரை போன அனுபவம் உண்டு. அது பாத யாத்திரை அல்ல. 1993-ல் உலகமயமாக்கலின் போது நாட்டில் உள்ள 42 தொழிற்கூடங்களுக்கு குஜராத் முதல் தூத்துக்குடி வரை சென்றோம். சுமார் நான்கு வருடங்கள் அந்த இடங்களுக்கு போன பிறகு எங்களுக்கு வந்த தெளிவுக்கு பின்னர் நாங்கள் சொன்னது அப்படியே நடந்தது. நம் நாட்டுக்கு அந்நிய முதலீடு பெரிய அளவில் கிடைக்காது என்றோம். எட்டு சதவீத அந்நிய முதலீட்டை எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த 18 வருடங்களில் வந்த அந்நிய முதலீடு வெறும் 1.2% தான். சேமிப்பு 23% -இல் இருந்து 37%-மாக உயர்ந்தது. காரணம் நமது குடும்பங்கள் தான்.
அப்போது திருப்பூருக்கும் சென்றோம். அங்கு உள்ள முதலாளிகள் அங்கு உள்ள குறுகிய சாலைகளில் டி.வி.எஸ். வண்டியில் தான் பயணிக்கிறார்கள். அறுபது சதவீத ஏற்றுமதியாளர்கள் வெறும் எட்டாம் வகுப்புக்கும் கீழே படித்தவர்கள். ஏழு சதவீதம் பேர் மட்டுமே பட்டதாரிகள்.
குஜராத் மாநிலம் மோர்விக்கும் சென்றோம். அவர்கள் பல இயற்கை சீற்றங்களுக்கு பிறகும் நிமிர்ந்து நிற்கிறார்கள். குஜராத் மாநிலம் சூரத் 20 வருடங்களுக்கு முன்னால் சுற்று வட்டார கிராமங்களின் மக்கள் செய்த கழிவுகளால் சுத்தமின்றி கிடந்தது. அந்த சுற்று வட்டாரத்தினர் நகை செய்யும் வித்தையை கற்றுக் கொண்டனர். இன்று ஒவ்வொரு கிராமமும் ஒரு தொழிற் கூடமாக காட்சி அளிக்கிறது. உலகத்தில் உள்ள வைர உற்பத்திகளில் மூன்றில் இரண்டு பங்கு அங்கு தான் நடக்கிறது.
2001- ஆம் ஆண்டு உலக பொருளாதார வரலாறு எழுதப்பட்டது. அதில் பாரத நாடு தான் 1750 வரை பெரிய முன்னேறிய நாடாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். 1800 வரை இன்றுள்ள பல வளர்ந்த நாடுகள் கீழ் நிலையில் தான் இருந்தன. அந்த நிலையில் நாம் இருந்ததற்கு எந்த பயிற்சி நிலையமும் காரணம் அல்ல. சமுதாயமே காரணம். இதை சமூக மூலதனம் என்று மேலை நாடுகள் இப்போது சொல்கின்றன.
நமக்கு மட்டுமல்லாமல் பல நாடுகளுக்கும் கண்கவர் நாடாக அமெரிக்கா இருந்தது. ஆனால் குடும்ப சீரழிவுகளின் காரணமாக அங்கு பொருளாதாரம் வீழ்ச்சி பெற்று வருகிறது. இப்போது அவர்கள் கடனில் இருந்து மீள 104 ட்ரில்லியன் டாலர்கள் தேவை.
கடந்த 20 வருட பொருளாதார ஆய்வில் நாங்கள் தெரிந்துக் கொண்ட உண்மை, நமது பொருளாதாரத்துக்கும், அரசாங்கத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது தான். காரணம் அதை நாங்கள் புரிந்துக் கொண்டது பத்திரிக்கையை பார்த்து அல்ல. மக்களை பார்த்து தான்" என்று எஸ்.குருமூர்த்தி பேசினார்.
யாத்திரையின் மாநகர ஒருங்கிணைப்பாளர் சுந்தர் நன்றி கூறினார்.
ஆர்.எஸ்.எஸ். வடதமிழக அமைப்பாளர் பக்தவத்சலன், வடதமிழக இணை செயலாளர் எஸ்.சாம்பமூர்த்தி, சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தமிழக - கேரளா அமைப்பு செயலாளர் பிஜு உட்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Monday, April 2, 2012
குறுக்கு பாதை - சிறுகதை
"என்னால இதுக்கு மேல நடக்க முடியாது" என்று நான் புலம்ப ஆரம்பித்தேன்.
"அட... சும்மாயிருப்பா! கீழே போக இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும். அதுவரைக்கும் என்னால உன்னை தூக்கிக் கொண்டு வர முடியாது" என்று அடக்கினார் சீனு அண்ணன். ஆனால் அவர் கூறிய தகவல் என்னை அடக்காமல் அதிகமாக புலம்ப வைத்தது.
"என்னது...?! இன்னும் ரெண்டு மணி நேரமா? அதுவரைக்கும் என்னால நடக்க முடியாது. கீழே போகறதுக்குள்ள நான் செத்துருவேன். இந்த கிரிவலத்தை கண்டுபுடிச்சவன் யாருன்னு தெரியல. அவன் மட்டும் என் கையில கிடைச்சான்..." என்று பற்களை கடித்தேன்.
இப்போது சீனு அண்ணன் சிரித்தார். " விட்டா அண்ணாமலையாரை கூட திட்டுவ போல"
"விட்டா என்ன? அண்ணாமலையாரை திட்ட எனக்கென்ன பயம்... எந்த கடவுளும் தனக்கு இப்படி வழிபாடு செஞ்சா தான் அருள் பண்ணுவேன்னு சொன்னா அவன் கடவுளே இல்ல. காட்டுமிராண்டி" என்று வெடித்தேன்.
சீனு அண்ணன் என்னை உற்று பார்த்தார். பிறகு கடகடவென்று மீண்டும் சிரித்தார். "உண்மைதான். தனக்கு இப்படி வழிபாடு செஞ்சா தான் அருள் தருவேன்னு அண்ணாமலையார் சொல்லலை. நாம தான் அவர் பேரு சொல்லி இப்படியெல்லாம் கிரிவலம் போறோம். அது சரி? நீ தானே குறுக்கு வழில கிரிவலம் போகணும். அந்த வழியை காண்பிங்கன்னு கேட்டே? அண்ணாமலையார் என்கிட்டே கேட்கலையே?" என்றார்.
"நான் தான் கேட்டேன். இப்பவும் ஆசை தான். ஆனா கால் வலிக்குதே?"
இப்போது காலை பார்த்தேன். மரண வலி எடுத்தது.
*********
எனக்கு இப்படி குறுக்கு வழி கிரிவலம் போகும் ஆசை சந்துருவால் தான் வந்தது.
சந்துரு, என் வகுப்பு தோழன். அவனுடைய அப்பா நாங்கள் படித்த பள்ளியில் தான் ஆசிரியராக இருந்தார். அதனால் சந்துரு எப்பவும் பந்தாவாக தான் இருப்பான். அதுவும் எனக்கு தெரியாத விஷயத்தைப் பற்றி என்னிடம் பந்தா செய்வது அவனுக்கு முக்கிய பொழுதுபோக்கு.
இப்படி தான் என்னிடம் அந்த விஷயத்தையும் சொன்னான். "நம்ம ஊருக்கு ஒவ்வொரு பௌர்ணமிக்கும் இசைஞானி இளையராஜா கிரிவலம் வர்றார் தெரியுமா?"
"தெரியுமே!" என்றேன் நான்.
"அது விஷயம் இல்ல. அவர் எந்த வழியில் கிரிவலம் போறார்னு உனக்கு தெரியுமா?" என்று கேட்டான் சந்துரு.
"எல்லோரும் போற வழியில தான் இருக்கும்"
"போடா... அந்த வழியில போனா கிரிவலம் போற மக்கள் அவரை தொந்தரவு செய்ய மாட்டாங்களா? அவர் போகறது குறுக்கு வழியில" என்று பெருமிதம் பொங்க சொன்னான் சந்துரு.
குறுக்கு வழி என்று சொன்னதும் எனக்கு சந்தோசம் தாங்கவில்லை. 'இனிமேல் அடிக்கடி கிரிவலம் போய் புண்ணியம் தேடிக்க வேண்டியது தான்' என்று நினைத்துக் கொண்டேன்.
"டேய்... உனக்கு அந்த வழி தெரியுமா?" என்று கேட்டேன்.
"தெரியுமே..." என்றான் பந்தாவாக.
"எனக்கும் காண்பியேன் டா...:" என்று கெஞ்சினேன்.
"அதெல்லாம் காண்பிக்க மாட்டேன்" என்று ஒரேயடியாக மறுத்து விட்டான். அவன் அந்த வழியை எனக்கு சொல்லி விட்டால் அவனுடைய 'வாத்தியார் பையன்' என்ற இமேஜ் என்ன ஆவது?
*****
அப்போது தொடங்கிய தேடல் தான் 'குறுக்கு வழி கிரிவலப் பாதை'. ஊரில் யார் அண்ணாமலையார் மீது அதீத பக்தி கொண்டதாக எனக்குப்பட்டாலும் அவர்களிடம் "கிரிவலப்பாதைக்கு ஒரு குறுக்கு வழி இருக்காமே? உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்டு விடுவேன். எனக்கு தெரிந்து பலருக்கு குறுக்கு வழியில் ஒரு கிரிவலப்பாதை இருப்பது தெரியவே இல்லை. 'எனக்கு தெரிந்த தகவல் கூட பல பேருக்கு தெரியல' என்ற இறுமாப்பில்(!) திரிந்தேன்.
அந்த நேரத்தில் தான் சீனு அண்ணனின் நட்பு எனக்கு கிடைத்தது. என்னை போலவே ஊரை பற்றிய தேடல் உள்ளவர் என்பது தான் எங்களுக்கு நட்பு ஏற்பட காரணம். அவரிடம் மட்டும் விடுவேனா?.
"மலைக்கு உள்ளே ஒரு குறுக்கு வழி கிரிவலப்பாதை இருக்காமே? உங்களுக்கு தெரியுமா அண்ணா..." என்று அவரிடமும் என் வேட்டையை நடத்தினேன்.
"தெரியுமே.." என்ற பதில் அவரிடம் இருந்து வந்தது. "அப்பாடா... ஒரு வழியா கிடைச்சுது' என்று நினைத்துக் கொண்டேன்.
"எனக்கும் காண்பிக்கறீங்களா அண்ணா" என்று கேட்டு பார்த்தேன்.
"வர சனிக்கிழமை உனக்கு லீவு தானே போகலாமா" என்று திருப்பிக் கேட்டார்.
பழம் நழுவி பாலில் விழுந்து விட்டது. இரண்டு பேரும் சனிக்கிழமை மதிய சாப்பாட்டுக்கு பிறகு .ரமணாசிரமத்தில் சந்திப்பதாக குறித்துக் கொண்டோம்.
*****
என் நெடுநாள் கனவு பலிக்கும் சகுனமாக வெள்ளிக்கிழமை நல்ல மழை பெய்தது.
முடிவு செய்தபடி சனிக்கிழமை மதியம் ரமணாசிரமத்தில் இருவரும் ஆஜர் ஆனோம். சீனு அண்ணன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.
"மழை பெய்து மலையில் கல்லு அதிகமா இருக்கும். உனக்கு பிரச்சனையில்லையே" என்று கேட்டார். அவர் ஏன் அப்படி கேட்டார் என்று எனக்கு அப்புறம் தான் தெரிந்தது.
வேகமாக மலையேற ஆரம்பித்தோம். முதலில் எனக்கு மகிழ்சியில் தெரியவில்லை. பிறகு காலில் கற்கள் குத்த ஆரம்பித்தன. கால்கள் வலி எடுக்க தொடங்கியது
****
"இன்னும் கொஞ்ச தூரம் தான் பா. சீக்கிரம் நட" என்று விரட்ட ஆரம்பித்தார் சீனு அண்ணன்.
"நிக்க கூட முடியலண்ணா..." என்று முனகினேன்.
"இன்னும் கொஞ்ச தூரம் தான், பொறுத்துக்கோ. இருட்ட ஆரம்பிச்சா இறங்கறது கஷ்டம்" என்றார். வேகமாக நடக்கத் தொடங்கினேன். கால் வலி எனக்கு மரண பயத்தை தந்தது. மயக்கம் வந்தது.
கொஞ்ச நேரம் கழித்து சீனு அண்ணன், "அதோ பார் இடுக்கு பிள்ளையார் கோவில் தெரியுது. இன்னும் ஐந்து நிமிஷத்துல இறங்கிடலாம்" என்று குரல் தந்தார். உற்சாகமாக மயக்கம் தெளிந்து நடக்க ஆரம்பித்தேன்.
ஒரு வழியாக கீழே இறங்கினோம். அப்போது தான் ஒரு விஷயம் ஏன் நினைவுக்கு வந்தது. இவ்வளவு நேரமாக அண்ணாமலையாரை வேண்டவே இல்லை.
"என்னப்பா, நேத்து மழை பெஞ்சதால இப்படி இருக்கு. இன்னொரு முறை வெயில் காலத்துல போகலாம்" என்றார் சீனு அண்ணன்.
"வேண்டாம் அண்ணா... கஷ்டமோ, நஷ்டமோ இனிமேல் நேர்வழியிலேயே கிரிவலம் போறேன்" என்றேன் அழுத்தமாக.
Sunday, December 18, 2011
நூல் விமர்சனம் - சில்லறை வர்த்தகத்தை சீரழிக்கும் அந்நிய நேரடி முதலீடு

நூல் மதிப்புரை
நூல்: சில்லறை வர்த்தகத்தை சீரழிக்கும் அந்நிய நேரடி முதலீடு
நூலாசிரியர்கள்: எஸ்.குருமூர்த்தி, சேகர் ஸ்வாமி
வெளியீடு: சுதேசி விழிப்புணர்வு இயக்கம், தமிழ்நாடு
கே 75, 14- வது தெரு, அண்ணாநகர் கிழக்கு, சென்னை - 600 102.
தொடர்புக்கு : 9443140930
விலை: ரூபாய் 10 /- மட்டும்
சில்லறை வர்த்தகத்தில் 51% நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பதை மத்திய காங்கிரஸ் அரசு தற்போதைக்கு ஒத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தமிழ்நாடு கிளை இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளது பொருத்தமானது. திரு.எஸ்.குருமூர்த்தி அவர்களும், திரு.சேகர் ஸ்வாமி அவர்களும் இந்த பிரச்சனை பற்றி நன்கு ஆராய்ந்து பத்திரிக்கைகளில் எழுதிய கட்டுரைகள் மற்றும் எஸ்.குருமூர்த்தி அவர்களின் ஒரு பேச்சின் தொகுப்பே இந்த புத்தகம்.
திரு.எஸ்.குருமூர்த்தி அவர்களின் கட்டுரைகளும், பேச்சும் ஏற்கனவே படித்து, ரசித்தது தான் என்றாலும் புத்தகத்தின் வடிவில் பார்க்கும் போது இன்னும் சுவை கூடவே செய்கிறது. நம் நாட்டின் பெரும்பாலான மக்கள் (சுமார் 4 கோடி குடும்பங்கள்) ஏற்கனவே சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள போது, அந்நிய நிறுவனங்களின் கையில் சில்லறை வர்த்தகம் சிக்கினால் என்ன ஆகும் என்பதை தெளிவாக விளக்குகிறார்; நம் நாட்டு சிறு விவசாயிகள் அயல் நாட்டு விவசாயிகளை போன்றவர்கள் இல்லை, அவர்களால் பெரிய நிறுவனங்களை அணுகக்கூட முடியாது என்ற உண்மையை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார். சில்லறை வர்த்தகத்தில் இதுவரை இருக்கும் பாரம்பரியமான சந்தைப்படுதலும், கலாச்சார நடைமுறைகளும் வால் மார்ட் போன்ற அந்நிய நிறுவனங்களால் எப்படி சிதையும் என்பதை விரிவாக எடுத்துரைக்கிறார் திரு.குருமூர்த்தி. அவ்வாறு சிதையும் அபாயத்தை நினைத்தாலே பிரதமர் மன்மோகன் சிங் மொழியில் சொன்னால் "கவலை தருகிறது".
திரு.சேகர் ஸ்வாமி அவர்கள் தி ஹிந்து பிசினஸ் லைனில் எழுதிய கட்டுரைத் தொகுப்பிலிருந்து சில பகுதிகள் இந்த புத்தகத்தில் வெளிவந்துள்ளது. விவரம் புரியாமல் வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை இது. பெரும் நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டால் நுகர்வோர் உரிமை எவ்வாறெல்லாம் பாதிப்படையும் என்பதை அழகாக எடுத்துரைக்கிறார். நம் பாரத நாட்டை பொறுத்தவரை சில்லறை வர்த்தகத்தில் இடைத்தரகர் மூமாக ஈடுபடுவதே நுகர்வோருக்கு மட்டும் இல்லை, விவசாயிகளுக்கும் சிறந்தது என்பதை விளக்குகிறார். சில்லறை வர்த்தகத்துக்கு ஆதரவான அனைத்து கருத்துக்களுக்கும் நேர்மையாக பதில் அளித்துள்ளார். சில்லறை வர்த்தகம் பற்றி ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ கருத்து கொண்டிருப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய விஷயங்கள் தரப்பட்டுள்ளன.
அட்டைப்படத்தில் சில்லறை வர்த்தகர்கள் இடம்பெற்றுள்ளது புத்தகத்தில் விறுவிறுப்பை கூட்டுகிறது. மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர்கள் இந்த புத்தகத்தை படித்து, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி ஆகியோரின் செவிட்டு காதில் ஊளையிட்டால் நல்லது.
Subscribe to:
Posts (Atom)